கையும் களவுமாக பிடிப்பட்ட அரசு பெண் அதிகாரி.. அதிர்ச்சியில் நெஞ்சுவலி.. போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த பரிதாபம்.!

By vinoth kumar  |  First Published Mar 19, 2020, 12:09 PM IST

கரூர் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தவர் ஜெயந்தி ராணி (50). இவர் பட்டா வழங்குவதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என ஜெயந்தி ராணி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ் இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை ரகசிய தகவல் கொடுத்துள்ளார்.


கரூரில் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்ட பெண் வட்டார வளர்ச்சி அலுவலர் நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்கு முன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தவர் ஜெயந்தி ராணி (50). இவர் பட்டா வழங்குவதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என ஜெயந்தி ராணி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ் இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை ரகசிய தகவல் கொடுத்துள்ளார். புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கொடுத்த அறிவுரையின் பெயரில் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டினை ஜெயந்தி ராணியிடம் ரமேஷ் லஞ்சமாக வழங்கியுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதனையடுத்து, அலுவலகத்தின் வெளியில் காத்துக் கிடந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து ஜெயந்தி ராணியை கையும் களவுமாகக் பிடித்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று இரவு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மலர்விழி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக நீதிபதி வீட்டுக்கு ஜெயந்தி ராணியை போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதற்கு காத்திருந்தனர். அப்போது ஜெயந்தி ராணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி நெஞ்சுவலியால் உயிர் இழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!