தமிழகத்தில் முதன்முறையாக 8 கோட்டங்களில் மிக குறைந்த தூரம் இயங்கும் வழித்தடங்களில் குளிர்சாதன வசதி கொண்ட புதிய பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் முதன்முறையாக 8 கோட்டங்களில் மிக குறைந்த தூரம் இயங்கும் வழித்தடங்களில் குளிர்சாதன வசதி கொண்ட புதிய பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
குறைந்த தூர வழித்தடங்களில் மட்டுமே இயங்கக் கூடிய இந்த பேருந்துகளில், கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட கரூர் மண்டலத்துக்கு 6 பேருந்துகளும், காரைக்குடி மண்டலத்துக்கு 1 பேருந்து, திருச்சி மண்டலத்துக்கு 3 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை கரூரிலிருந்து திருப்பூர், திருச்சி, ராமேஸ்வரம், தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட வழித்தடங்களிலும், திருச்சியிலிருந்து கோவை, பழனி மற்றும் காரைக்குடியிலிருந்து திருச்சி உள்ளிட்ட 10 வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
undefined
இதையும் படிங்க;-
நிகழ்ச்சிக்கு பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தமிழகத்தில் போக்குவரத்து கழகங்களில் உள்ள 8 கோட்டங்களில் பணியாற்றி வரும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 20 சதவீதம் போனஸ் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதற்காக 206.52 கோடி நிதி வழங்கி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- ஒதுக்குப்புறமாக கூப்பிட்டு போய் சித்தி என்று கூட பாராமல் சின்னாபின்னமாக்கிய ராணுவ வீரர்..!
மேலும், சென்னையில் விரைவாக 50 குளிர்சாதன பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் பொதுமக்களின் வசதிக்காக இயக்கப்படும். அதை கண்காணிக்க, சிறப்பு ஹை வே பேட்ரோல் மற்றும் பரிசோதகர்கள் என்று நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் தீபாவளி பண்டிக்கைக்காக 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.