அட கடவுளே... 45 வயது ஆண்டியுடன் 21 வயது இளைஞர் காதல்... 2 பிள்ளைகளை விட்டு ஓட்டம் பிடித்த தாய்..!

Published : Feb 16, 2021, 04:44 PM IST
அட கடவுளே... 45 வயது ஆண்டியுடன் 21 வயது இளைஞர் காதல்... 2 பிள்ளைகளை விட்டு ஓட்டம் பிடித்த தாய்..!

சுருக்கம்

நாகர்கோவிலில் தனது மகள் வயது உள்ள கல்லூரி மாணவனுடன் 45 வயது பெண் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் தனது மகள் வயது உள்ள கல்லூரி மாணவனுடன் 45 வயது பெண் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் காந்திகாலனியை சேர்ந்தவர் 45 வயது பெண். இவரது கணவர் பெயிண்டிங் வேலை செய்கிறார். இந்த தம்பதிக்கு கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மகளும், 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் அக்கம் பக்கத்தினர் பலர் உதவி செய்து வந்துள்ளனர். இந்த நிலையில்தான் அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் 45 வயது பெண்ணுக்கு வாரம் தோறும் சில உதவிளை செய்து வந்துள்ளது. இதனால் அந்த குடும்பத்துடன் மிகவும் பாசமாக இருந்த பெண் குடும்பத்தினருடன் பல நாட்களை அந்த வீட்டிலேயே கழித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு 45 வயது பெண்ணுக்கு உதவி செய்து வந்த வீட்டில் இருந்த சுமார் 21 வயது இளைஞரை திடீரென மாயமாகினர். பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால், அப்பகுதி மக்கள் இருவரும் கையில் பையுடன்  நாகர்கோவில் சென்றதை பார்த்துள்ளனர். இது தொடர்பாக பிள்ளையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இதில் 45 வயது பெண்ணிற்கும் அந்த இளைஞருக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்துள்ளது. அடிக்கடி அந்த இளைஞரின் வீட்டிற்கு சென்று வரும் அந்த பெண் பல நேரங்களில் அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதேபோல், இரவு நேரம் வந்துவிட்டால், தனது மகள், மகனை அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கும், கணவரை இன்னொரு உறவினர் வீட்டிற்கும் கட்டாயப்படுத்தி அனுப்பி விடுவாராம். அதன் பிறகு கள்ளக்காதலான கல்லூரி மாணவனுடன் வீடியோ காலில் விடிய விடிய பேசுவார்களாம். இதை அறிந்த பெண்ணின் மகள் கண்டித்து உள்ளதாகவும், மகளை சமாதான படுத்தி தாய் கள்ளக்காதலை தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் அந்த பெண் வீட்டிற்கு டைல்ஸ் போட வேண்டும் என்று கூறி ஒருவரிடம் ரூ.25 ஆயிரமும், பலரிடம் ரூ.2 ஆயிரம் தொடங்கி ரூ.3 ஆயிரம் வரை மொத்தம் ரூ.30 ஆயிரம் வரை வாங்கிவிட்டு அந்த இளைஞருடன் தலைமறைவானது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அட்மிஷன் துவக்கம்: 50+ பாடங்கள், தேர்வு முறை, முக்கிய தேதிகள்- முழுவிவரம்
ஷாக்கிங் நியூஸ்! ரயிலை கவிழ்க்க சதி! பல உயிர்களை காப்பாற்றிய லோகோ பைலட்! நடந்தது என்ன?