கொரோனா காரணமாக அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அறைகள் அனைத்தும் காலியானது. இதை பயன்படுத்தி மருத்துவமனை அறையை தங்களது பள்ளியறையாக கள்ளக்காதல் ஜோடி மாற்றியது.
குமரி அரசு மருத்துவமனையில் செவிலியரும் கள்ளக்காதலனும் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மலையோர பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. இதை மையமாக கொண்டு இயங்கும் 108 ஆம்புலன்சில் சுமார் 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நர்சாக உள்ளார். இதற்கு முன்பு வேறு பகுதியில் உள்ள ஆம்புலன்சில் வேலை பார்த்தார். அப்போது ஆரல் வாய்மொழி பகுதியை சேர்ந்த டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
அதன்படி தினசரி பணி நேரத்தின்போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 2 பேரும் உல்லாசமாக இருந்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் நாளடைவில் அரசல் புரசலாக வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. இது தொடர்பாக பிரச்சினை வெடித்தது. தொடர்ந்து மலையோர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை மையமாகக் கொண்டு செயல்படும் 108 ஆம்புலன்ஸ்க்கு நர்ஸ் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இருப்பினும் கள்ளக்காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்தார். அதன்படி 2 பேரும் செல்போனில் வீடியோ கால் மூலம் மணிக்கணக்கில் பேசி வந்தனர். இந்நிலையில் கொரோனா காரணமாக அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அறைகள் அனைத்தும் காலியானது. இதை பயன்படுத்தி மருத்துவமனை அறையை தங்களது பள்ளியறையாக கள்ளக்காதல் ஜோடி மாற்றியது. அதன்படி நள்ளிரவில் பைக்கில் கள்ளக்காதலனை மருத்துவமனைக்கு அழைத்தார். கள்ளக்காதலன் வந்ததுமே ஏதாவது ஒரு அறைக்குள் சென்று இரண்டு பேரும் கதவை மூடிக் கொள்வார்களாம். அதன்பிறகு உல்லாசமாக இரவைக் கழித்துவிட்டு காலையில் வெளியே வருவார்களாம். இதை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நோட்டமிட்டனர். தொடர்ந்து கள்ளகாதலர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.
இந்நிலையில், வழக்கம் போல இரவு 11 மணியளவில் கைப் ஒன்று வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தத. இதை பார்த்த இளைஞர்கள் 2 பேரையும் கண்காணிக்க தொடங்கினர். பைக்கில் வந்தவர்கள் கையில் ஒரு பார்சலுன் அறைக் கதவைத் தட்டினார். உடனே கதவு திறக்கப்பட்டது பைக்கில் வந்த அறைக்குள் சென்றதும் சற்றும் தாமதிக்காமல் கதவு பூட்டப்பட்டது.
இதனையடுத்து, அறையின் கதவு வெளிபுறமாக பூட்டி கள்ளக்காதல் ஜோடியை சிறை வைத்தனர். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் எல்லாம் ஒன்றாக கூடினர். கதவை திறந்து பார்த்த போது உள்ளே செவிலியருடன் வாலிபரும் ஒன்றாக இருந்தனர். உடனே வாலிபருடன் இருந்த செவிலியருடன் இது எனது கணவர் என்று கூறி சமாளிக்க முயன்றார். உடனே பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுப்போம் என்று மிரட்டினர். இதனால், பயந்து போன செவிலியருடன் கண்ணீர்விட்டு கதறினார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.