கனவில் கிணற்றுக்குள் விழுந்த இளைஞர்... புதையலைத் தேடி விழுந்தாரா..? பேய் துரத்தி விழுந்தாரா..?

By Thiraviaraj RMFirst Published Nov 22, 2019, 2:51 PM IST
Highlights

பேய் துரத்தியது போல் கனவுகண்டு ஓடிவந்து கிணற்றுக்குள் விழுந்த இளைஞரை  தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நேற்று இரவு பேய் துரத்துவது போல் கனவு கண்ட இளைஞர் கோயில் அருகில் உள்ள கிணற்றுக்குள் விழுந்துள்ளார். மறுநாள் காலை கன்னியாகுமரி மாவட்டம்,  அயனிவிளை நாகதேவி கோவில் அர்ச்சகர், கிணற்றுக்குள் இருந்து ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து சென்று பார்த்துள்ளார். இரும்பு வலைக்கதவு போட்டு மூடப்பட்ட,  குறுகிய விட்டம் கொண்ட அந்தக் கிணற்றுக்குள் குறைந்த அளவில் இருந்த தண்ணீரில் நின்றவாறு இளைஞர் ஒருவர் தன்னை காப்பாற்றுமாறு  கூக்குரலிட்டுள்ளார்.

உடனடியாக அர்ச்சகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தீயணைப்புத்துறையினர் வந்து வலையைக் கட்டி இளைஞரை மேலே தூக்கினர். விசாரணையில் பேய் துரத்துவது போல் கனவு கண்டு உள்ளே விழுந்துவிட்டதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். ஆனால் கோவில் கிணற்றுக்குள் புதையல் இருப்பதாக அப்பகுதியில் நீண்டகாலமாகவே வதந்திகள் உலவி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே இளைஞர் கூறும் பேய் கனவு உண்மைதானா? அல்லது வேறு சிலருடன் புதையல் தேடி வந்து கிணற்றுக்குள் சிக்கினாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

click me!