கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை அடுத்த குற்றியாபுரம் மலைக்கிராமத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டுவிட்டது. இதனால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். நேற்றிரவு போன மின்சாரம் நீண்ட நேரமாகியும் வராததால் அந்த ஊர் இளைஞர்கள் சஜின் சலோ, சுபாஷ், மன்மதன் ஆகிய 3 பேரும் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள ஜீரோ பாயிண்ட் பகுதிக்கு சென்று அங்குள்ள மின் மாற்றியில் தங்கள் கிராமத்திற்கு வரும் இணைப்பை சரி செய்ய முயன்றதாகவும், அப்போது மின்சாரம் தாக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தனர்.
மூவரும் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அவ்வழியே சென்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசாபர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.