மகன் திருமணத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த தந்தை... பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்..!

By vinoth kumar  |  First Published May 26, 2020, 11:39 AM IST

நாகர்கோவிலில் நடந்த திருமண விழாவில் மணமகனின் தந்தை மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 


நாகர்கோவிலில் நடந்த திருமண விழாவில் மணமகனின் தந்தை மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு  செய்த போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மணலி பகுதியை சேர்ந்த 63 வயது நிரம்பிய மளிகை கடை வியாபாரி ஒருவர். தனது மகனின் திருமணத்துக்காக நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் திடீரென மணமகனின் தந்தை திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து, உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Latest Videos

பின்னர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இறந்த முதியவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என சளி, ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அங்குள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவு நேற்று மாலை வெளியானது. அதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து கூடங்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வியாபாரியின் உடலுடன் வந்த உறவினர்கள் 3 பேருக்கும், போலீசார் 5 பேருக்கும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவு இன்று தெரிய வரும் என்று  மருத்துவர்கள் தெரிவித்தனர்.

undefined

திருமண விழாவுக்கு சுமார் 50  பேர் வந்திருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் யாருக்காவது முதியவர் மூலமாக கொரோனா பரவியிருக்குமோ? என்ற அச்சத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளனர். 

click me!