கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆமூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெருங்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்துப் பண்ணை உள்ளது. இந்நிலையில், இந்த பண்னையில் வளர்க்கப்பட்ட கோழிகளும், வாத்துகளும் கூட்டம் கூட்டமாக திடீரென இறந்தது.
தனியாருக்கு சொந்தமான பண்ணையில் கோழிகள் மற்றும் வாத்துகள் கூட்டம் கூட்டமாக திடீரென இறந்ததை அடுத்து அதன் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆமூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெருங்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்துப் பண்ணை உள்ளது. இந்நிலையில், இந்த பண்னையில் வளர்க்கப்பட்ட கோழிகளும், வாத்துகளும் கூட்டம் கூட்டமாக திடீரென இறந்தது. இவற்றின் ரத்த மாதிரி பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது உறுதியானது. தொடர்ந்து திருவனந்தபுரம் மாவட்டம் முழுவதும் முன்னேச்சரிகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
undefined
பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட கோழிப்பண்ணையை சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்ணைகளில் உள்ள கோழிகள் வாத்துகள் வீடுகளில் வளர்க்கப்படுகின்ற பறவைகள் ஆகியவற்றை அங்குள்ள அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த பறவை காய்ச்சல் எதிரொலியாக அண்டை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் கேரளாவில் இருந்து கோழி இறைச்சிகள் கோழிகள் உரம் தீவனம் முட்டை ஆகியவை விற்பனைக்காக அல்லது கறிக்கோழிக்காக கொண்டு வருவப்படுவதற்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் குமரி கேரளா எழுச்சியான களியக்காவிளையில் உள்ள சோதனை சாவடிகளில் இன்று முதல் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்ட எல்லையில் உள்ள கோழிப்பண்ணைகள் வாத்து பண்ணைகள் கால்நடை வளர்ப்பு பண்ணைகளில் எல்லாம் கால்நடை அதிகாரிகள் சென்று குழு குழுக்களாக சென்று தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.