கன்னியாகுமரியில் வரத்து குறைவால் மீன்கள் விலை கடும் உயர்வு

By Velmurugan s  |  First Published Jan 7, 2023, 4:38 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரத்து குறைவால் குளச்சலில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கணவாய் மீன் கிலோ ரூ.400க்கும் ஆக்டோபஸ் கணவாய் மீன் ரூ.300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நடுக்கடலில் சுமார் 7-நாட்கள் வரை தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக 12 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க செல்லவி்ல்லை.

உறுப்புகளை தானமாக வழங்கி இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை

Tap to resize

Latest Videos

undefined

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் மீன்பிடி தொழிலுக்கு சென்றனர். ஆனால் கடலில் பலத்த காற்று வீசி வருவதால் ஆழ்கடல் மீன்பிடிப்பில் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. இதனால், விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலை கைவிட்டு பாதியிலேயே கரை திரும்பி வருகின்றனர்.

பொங்கல் தினத்தில் SBI தேர்வு; தேர்வு தேதியை மாற்றி அமைக்ககோரும் தேர்வர்கள்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கரை திரும்பிய படகுகளில் குறைந்த அளவிலேயே மீன்கள் பிடிபட்டிருந்த நிலையில் அவற்றை வாங்க வியாபாரிகள் போட்டி போட்ட நிலையில் சாதாரணமாக கிலோ ரூ.200க்கு விற்பனையாகும் கட் பிஷ் கணவாய் ரூ.400க்கு விற்பனையாகிறது. அதேபோல் ரூ.100 முதல் ரூ.150க்கு விற்பனை செய்யப்படும் ஆக்டோபஸ் ரக கணவாய் மீன்கள் ரூ.300க்கும் விற்பனையானது.

click me!