கன்னியாகுமரியில் மாவட்ட தபால் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து காவல் துறையினர் தபால் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் சாலையில் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் தபால் நிலைய அதிகாரிக்கு நேற்று அல் கொய்தா அன்சாரி அமைப்பு என்று குறிப்பிடப்பட்ட கடிதம் ஒன்று வந்தது.
அந்த கடிதத்தில் இன்று (11ம் தேதி) பார்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பார்சலில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது வெடித்து சிதற போவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக கடிதம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கைரேகை பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தாகுமா? அமைச்சர் சக்கரபாணி சொன்ன முக்கிய தகவல்.!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சீனியர் போஸ்ட் மாஸ்டர் செல்வ சிவராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் தபால் நிலையத்தை காவல் துறையினர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.