தமிழர் திருநாளான தைத்திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள் ஆகியோருக்கு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பணியாளர்களுக்கு சீருடை என ஒவ்வொருவருக்கும் இரண்டு சீருடை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஒரு இட்லியை 1 ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்கும் உணவகங்கள் - வாடிக்கையாளர் குற்றச்சாட்டு
undefined
இதனைத் தொடர்ந்து சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள 36 ஆயிரத்து 684 கோவில்களில் பணிபுரியும், 52 ஆயிரத்து 803 பணியாளர்கள் பயன் பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆளுநர், முதல்வர் பிரச்சினையை ஓரங்கட்டுங்க; முதல்ல இதுக்கு தீர்வு சொல்லுங்க - அன்புமணி கோரிக்கை
அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நாகர்கோவில் நாகராஜா ஆலயத்தில் வைத்து அர்ச்சகர்கள், பணியாளர்கள் என முதற்கட்டமாக 50 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை மாநகராட்சி மேயர் மகேஷ் வழங்கி தொடங்கி வைத்தார், மேலும் குமரி மாவட்டத்தில் 490 இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் உள்ள 437 அர்ச்சகர்கள், பணியாளர்களில் ஆண்கள் 229 பேருக்கும் பெண்கள் 78 பேருக்கும் 130 அச்சர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.