கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்தவர் மரணம்..! கன்னியாகுமரியில் பரபரப்பு..!

By Manikandan S R SFirst Published Mar 26, 2020, 10:18 AM IST
Highlights

உயிரிழந்த நபருக்கு ஏற்கனவே மூளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்துள்ளது. இந்தநிலையில் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளின் முடிவிலேயே அவர் கொரோனாவால் இருந்தாரா? என்பது தெரிய வரும்.
 

உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் 657பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 12பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.

கன்னியாகுமரி, கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயது ஆண் கடந்த 3 ம் தேதி குவைத்தில் இருந்து திரும்பியுள்ளார். அவருக்கு தொடர் இருமல் மற்றும் காய்ச்சல் இருந்துவந்ததை அடுத்து கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் இருக்கும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்த நபருக்கு ஏற்கனவே மூளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்துள்ளது. இந்தநிலையில் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளின் முடிவிலேயே அவர் கொரோனாவால் இருந்தாரா என்பது தெரிய வரும்.

click me!