கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கிய தமிழகத்தின் சிறந்த போலீஸ்..! கணவன் பரபரப்பு வீடியோ..!

Published : May 16, 2019, 06:10 PM IST
கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கிய தமிழகத்தின் சிறந்த போலீஸ்..! கணவன் பரபரப்பு வீடியோ..!

சுருக்கம்

கேரள அரசால் கவுரவிக்கப்பட்ட களியக்காவிளை உதவி ஆய்வாளரைக் குறிப்பிட்டு, மனது மனைவியுடன் கள்ள உறவு வைத்துள்ளார் என கணவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். 

கேரள அரசால் கவுரவிக்கப்பட்ட களியக்காவிளை உதவி ஆய்வாளரைக் குறிப்பிட்டு, மனது மனைவியுடன் கள்ள உறவு வைத்துள்ளார் என கணவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். 

குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் சோமன்(45). இவர் தற்போது வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார். இவர் ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சோமன் என்பவர் தனது செல்போனில் இருந்து ஒரு வீடியோவை பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

அதில் தனது மனைவியை களியக்காவிளை உதவி ஆய்வாளர் மோகன அய்யர் அபகரித்து வைத்திருப்பதாகவும், இதனால் தான் மிகவும் மனம் உடைந்துள்ளதாகவும், இதனால் தான் சாகப்போவதாகவும், இது தமிழக அரசுக்கு வெட்கக்கேடான சம்பவம் எனவும் சோமன் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இதுகுறித்து களியக்காவிளை போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டுள்ள உதவி ஆய்வாளர், கன்னியாகுமரியில் நடந்த சபரிமலை போராட்டத்தின்போது சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த உதவி ஆய்வாளருக்கு கேரள அரசு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அட்மிஷன் துவக்கம்: 50+ பாடங்கள், தேர்வு முறை, முக்கிய தேதிகள்- முழுவிவரம்
ஷாக்கிங் நியூஸ்! ரயிலை கவிழ்க்க சதி! பல உயிர்களை காப்பாற்றிய லோகோ பைலட்! நடந்தது என்ன?