கன்னியாகுமரி மாவட்டத்தில் விடியவிடிய கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
தெற்கு கேரளா அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மைலாடியில் 103.02 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 2178 கன அடி தண்ணீர் வெளியேற்ற பட்டு வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கக் கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ரீமல் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் காரணமாகவும், தெற்கு கேரளா அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விடியவிடிய கனமழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கன மழையால் மாவட்டத்தில் அதிகபட்சமாக மைலாடியில் 103.02 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல், மாம்பழத்தாறு பகுதியில் 85 மில்லி மீட்டர் மழையும், ஆணைகிடங்கில் 84 மில்லி மீட்டர் மழையும், பாலமோரில் 82 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி: திருமணத்துக்கு முன்பு சம்பவம்!
கனமழை காரணமாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு வினாடிக்கு 4258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால், அணையிலிருந்து வினாடிக்கு 2178 கன அடி தண்ணீர் வெளியேற்ற பட்டு வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.