தொடக்கப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; அரசுப்பள்ளி ஆசிரியர் அதிரடி கைது

By Velmurugan s  |  First Published Aug 11, 2023, 10:22 AM IST

கன்னியாகுமரி அருகே அரசு தொடக்கப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட  ஆசிரியர் பச்சை பூ ராஜ் கைது. பெற்றோர்கள் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள மகாதானபுரம் அரசு தொடக்க பள்ளியில் கணித  ஆசிரியராக பணியாற்றி வருபவர், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்த பச்சை பூ ராஜ்(வயது 43). இவர் பள்ளி மாணவிகளை  பாலியல் ரீதியில்  சீண்டலில்  ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகளின்  பெற்றோர்கள் திடீரென பள்ளியில் கூடி அங்கிருந்த ஆசிரியர்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

இதனால் பள்ளிக்கூட வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட பச்சைப்பூ ராஜ் உடனடியாக தலைமறைவானார். இந்நிலையில் தகவல் அறிந்து வந்த கன்னியாகுமரி காவல் துறையினர் பள்ளிக்கூடத்தில் கூடியிருந்தவர்களிடம்  விசாரணை மேற்கொண்டு இது குறித்து புகார் அளிக்க கூறினார். 

Tap to resize

Latest Videos

undefined

காதலனுடன் பேசிக்கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் பயங்கரம்

இதனிடையே தலைமறைவான பச்சைப்பூ ராஜை தனிப்படை காவல் துறையினர் தேடி வந்தனர். அப்போது கூடங்குளம் பகுதிக்கு சென்ற பச்சைப்பூ ராஜிடம் இது சம்பந்தமாக ஒரு சிலர் பணம் கேட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து பேசுவதற்காக வட்டக்கோட்டை பகுதிக்கு பச்சைப்பூ ராஜ் வரும் போது, தனிப்படை காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின்  பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

click me!