நாகர்கோவில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் விடுதலை செய்து முதன்மை மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது காதலனுடன் தலைமறைவானார். இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியையும், 20 வயது காதலனையும் பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது சிறுமி அளித்த வாக்குமூலத்தில் கடந்த 2017ம் ஆண்டு தனது தாயார் தன்னை நாகர்கோவில் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த நாஞ்சில் முருகேசன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றபோது அங்கு முன்னாள் எம்எல்ஏ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
11 வயது சிறுமிக்கு இப்படிப்படியும் ஒரு நோயா? அரசு பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்
இதனை அடுத்து போலீசார் அந்த சிறுமியை மாவட்ட குழந்தைகள் நல அதிகாரியிடம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், மாணவியின் தாய் ஆனந்தி ஆகியோர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி நாஞ்சில் முருகேசனை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் இளைஞர் தலை துண்டித்து கொடூர கொலை; மாற்று சமூக பெண்ணை காதலித்ததால் வெறிச்செயல்?
இது தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில். பரபரப்பாக பேசப்பட்ட வழக்கில் இன்று முதன்மை மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் நாஞ்சில் முருகேசனை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.