15 நிமிடத்திற்கு ஒரு பெண் குழந்தை வன்கொடுமை செய்யப்படுகிறது..!! அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்..!!

By Ezhilarasan Babu  |  First Published Nov 24, 2019, 12:46 PM IST

கடந்த ஆறு மாதத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி 24 ஆயிரத்து 212 வழக்குகள் பதிவாகியுள்ளன.  அதாவது மாதம் ஒன்றுக்கு 4 ஆயிரம் வழக்குளும், நாளொன்றுக்கு 130 வழக்குகள் பதிவாகி வருகின்றன.  அதாவது 15 நிமிடத்திற்கு ஒரு பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறு. என புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டினார். தற்போது மக்கள் மத்தியில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.  ஆனால் பெரும்பாலானோர் அதுகுறித்து வெளியே சொல்ல முன்வருவதில்லை என்று அவர் தெரிவித்தார். 

ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு பெண்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது .  கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளையிட் உளவியல் ஆலோசனை மையத்தின் இயக்குனர் டாக்டர் ரத்தின ரூபா இதனைத் தெரிவித்துள்ளார்.  குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,  இதைத் தடுக்க சர்வதேச அளவில் பல்வேறு சட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. 

Latest Videos

இதுதொடர்பாக சமூக அமைப்புகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு இயக்கங்களை தொடங்கி,  குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.  நவம்பர் 19  உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை  தடுப்பு தினத்தை முன்னிட்டு. கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பயிலரங்கு நடைபெற்றது.  இதில்  பள்ளி, மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.  பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,  மற்றும் சமூக சேவகர்கள் கலந்து கொண்டனர்.  பெண் குழந்தைகளுடைய பாதுகாப்பை எப்படி பேணுவது,  போக்சோ சட்டம் சொல்வது என்ன.?  என்பது போன்ற சட்ட நுணுக்கங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.  அதில் பேசிய கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளை உளவியல் ஆலோசனை மையத்தின் இயக்குநர் டாக்டர்  ரத்ன ரூபா கூறுகையில்,  கடந்த ஆறு மாதத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. 

click me!