கோலம் போட்ட பெண்கள்! கொந்தளித்த பாஜக நிர்வாகி.. கொத்தாக துக்க சுத்துபோடும் போலீஸ்..!

By vinoth kumar  |  First Published Sep 19, 2023, 1:31 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உடையப்பன் குடியிருப்பு பகுதியில் திமுக மகளிரணியை சேர்ந்த பெண்கள் சிலர் ஒரு தெருவில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை வரவேற்கும் விதமாகவும், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோலமிட்டனர்.


நாகர்கோவில் அருகே கலைஞர் மகளிர் உரிமை தொகையை வரவேற்று கோலமிட்ட திமுக மகளிர் அணியினர் மற்றும் பெண்களை மிரட்டிய பாஜக பிரமுகர் ராஜேஷ் மீது போலீசார்  4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உடையப்பன் குடியிருப்பு பகுதியில் திமுக மகளிரணியை சேர்ந்த பெண்கள் சிலர் ஒரு தெருவில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை வரவேற்கும் விதமாகவும், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோலமிட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பாஜக நிர்வாகி ராஜேஷ்  எங்கள் ஊரில் எப்படி நீங்கள் நன்றி தெரிவித்து கோலம் போடலாம் என ஆவேசத்துடன் மிரட்டியுள்ளார். 

Tap to resize

Latest Videos

எங்கள் ஊரில், எங்கள் பணத்தில் போடப்பட்ட சாலையில், திமுக திட்டத்திற்கு கோலம் போடுவது தவறு என பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலானது. இந்நிலையில் திமுக மகளிரணியினரை மிரட்டிய ராஜேஷ் மீது 4 பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

click me!