NSS முகாமில் பங்கேற்ற 43 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி

By Velmurugan sFirst Published Jan 27, 2023, 5:44 PM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்டத்தில் என்.எஸ்.எஸ். முகாமில் கலந்து கொண்ட 43  மாணவ மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி என் எஸ் எஸ் மாணவர்களால் இன்று கன்னியாகுமரியில் மேற்கொள்ளப்பட்டது. இதில்  150 மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். இவர்கள் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை கன்னியாகுமரி திருவேணி சங்கமத்தில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

வேலூரில் உணவு டெலிவரி ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல்; ஒருவர் கைது சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு இட்லி, சாம்பார், வடை, தேங்காய் சட்டினி உள்ளிட்ட உணவு வகைகள் பார்சல் மூலம் வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட 43 மாணவ, மாணவிகளுக்கு வாந்தியும், லேசான மயக்கமும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் கொட்டாரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 30 பேர் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். 

மீதமுள்ள 13  பேர் உள்நோயாகளியாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

பரந்தூர் விமான நிலைய பிரச்சினைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை; மத்திய அரசு கைவிரிப்பு

மேலும் இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

click me!