கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை பகுதியைச் சேர்ந்த மீனவர் சவுதி அரேபியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த நிலையில், அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சகாய ரோஜஸ் (வயது 42) மீன்பிடி தொழிலாளியான இவருக்கு சகாய மெல்பா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். சகாய ரோஜஸ் சவுதி அரேபியாவில் அல்-ஒஸ்தா என்ற பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
அரியலூரில் அரை பவுன் மோதிரத்திற்காக விவசாயி அடித்து கொலை?
undefined
இந்த நிலையில் நேற்று மதியம் மீன்பிடி தொழிலுக்கு சென்றுவிட்டு அடுக்குமாடி குடியிருப்புக்கு திரும்பிய சகாய ரோஜஸ் மயங்கிய நிலையில் கால் இடறி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
கல்லூரியை ஒருமுறை கூட பார்க்காமல் பட்டம்பெறுபவர்கள் தான் எய்ம்ஸ் மாணவர்கள் - எம்.பி.வெங்கடேசன்
இதனையடுத்து உயிரிழந்த மீனவர் சகாய ரோஜஸ் உடலை கைப்பற்றி அந்நாட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் உயிரிழந்த மீனவர் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.