நிரம்பி வழியும் சென்னை ஏரிகள்..! தண்ணீர் பஞ்சத்திற்கு இப்போதைக்கு டாட்டா..!

By Manikandan S R S  |  First Published Dec 4, 2019, 5:34 PM IST

கனமழை காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன.


கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தின் முக்கிய அணைகள் பல நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததையடுத்து ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

Latest Videos

undefined

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் 924 ஏரிகளில் 555 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. 133 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பி இருக்கிறது. 120 ஏரிகள் 50 சதவீதமும், 101 ஏரிகள் 50 சதவீதத்துக்கு கீழும் நிரம்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. 

மதுராந்தகம் ஏரி தற்போது நிரம்பும் தருவாயில் இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 576 ஏரிகளில் 153 ஏரிகள் நிரம்பியுள்ளன. கடந்த 2015 ம் ஆண்டு சென்னையின் வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணமாக விளங்கிய செம்பரப்பாக்கம் ஏரி  30 சதவீதம் அளவு தான் நிரம்பியிருக்கிறது.தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே ஏரி நிரம்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

click me!