தொலைச்சிடுவேன் ராஸ்கல்... இன்ஸ்பெக்டரை கன்னா பின்னாவென தீட்டிய காஞ்சி கலெக்டர்..!

By Thiraviaraj RM  |  First Published Aug 10, 2019, 1:34 PM IST
மாவட்ட ஆட்சியா் பொன்னையா பணி செய்ய விடாமல் தடுத்து, பொது மக்கள் மத்தியில் ஒருமையிலும் அநாகரிமான வார்த்தையாலும் திட்டி தீர்க்கிறார். 

40ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வரும் அத்திவரதரை காணு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள்
அணி அணியாக வந்துகொண்டு இருக்கிறார்கள். இதனால், கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளி
கல்லூரிகளுக்கு 13ந்தேதிமுதல் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்க வேண்டும் என்பதால் 16ம் தரிசனம் நிறைவடையும் என்றும், 16ம் தேதி இரவு அல்லது
17ம் தேதி அதிகாலை கிழக்கு கோபுர வாயில் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்திவரதர் விஷயத்தில் மாவட்ட
நிர்வாகமும், அரசும் பல்வேறு குளறுபடிகளை செய்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

அத்திவரதர் விஷயத்தில் மாவட்ட நிர்வாகமும், தமிழகஅரசும் மக்களை குழப்பி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஏற்கெனவே ரவுடி வரிச்சியூர் செல்வத்தை விஐபி வரிசையில் தரிசனம் செய்யவைத்த விவகாரத்திலும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவின் பெயர் அடிபட்டது. இந்த நிலையில் கலெக்டர் பொன்னையா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை ஒருமையில் திட்டித் தீர்க்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

காஞ்சி அத்தி வரதா் பாதுகாப்பு பணியிலிருந்த காவல் ஆய்வாளா், விஐபி வரிசையில் பொது மக்களை அனுமதித்த காரணத்திற்காக
மாவட்ட ஆட்சியா் பொன்னையா பணி செய்ய விடாமல் தடுத்து, பொது மக்கள் மத்தியில் ஒருமையிலும் அநாகரிமான வார்த்தையாலும் திட்டி தீர்க்கிறார். உன்னை சஸ்பெண்ட் செய்யாமல் விடமாட்டேன். ஐஜியை கூப்பிடு. பித்தலாட்டம் செய்வதற்கா இங்கே வந்த.

தொலைச்சிடுவேன் ராஸ்கல்.. வெளியே போ.. வாசல்ல அவ்வளவு பேர் உட்கார்த்து இருக்கான். முக்கியமான விஐபி வரும்போது இப்படியா நடந்துக்குவ... உன்னை சஸ்பெண்ட் பண்ணினாத்தான் அடங்குவேன். என்ன திமிரு தனமா பண்ணிட்டு இருக்க்கீங்க போலீஸ்காரய்ங்க எல்லாம்... டேய் நீ இங்கே தானடா நிக்கிற.. மடையங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க’’ என அவர் கோபத்தில் போலீஸாரை ஒருமையில் திட்டும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

click me!