கேஸ் சிலிண்டர் லாரி டிரான்ஸ் பார்மரில் மோதி விபத்து.. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு..!

By vinoth kumarFirst Published Mar 13, 2020, 11:54 AM IST
Highlights

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள சிப்காட்டில் இருந்து 339 சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, டீச்சர்ஸ் காலனி அருகே லாரி சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி டிரான்ஸ் பார்மரில் பயங்கரமாக மோதியது. இதில் டிரான்ஸ் பார்மர் அருகே நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இரண்டு ஆட்டோ முற்றிலும் சேதமடைந்தது. 

ஈரோட்டில் சமையல் ஏரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரி டிரான்ஸ் பார்மரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை அடுத்து உரிய நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள சிப்காட்டில் இருந்து 339 சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, டீச்சர்ஸ் காலனி அருகே லாரி சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி டிரான்ஸ் பார்மரில் பயங்கரமாக மோதியது. இதில் டிரான்ஸ் பார்மர் அருகே நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இரண்டு ஆட்டோ முற்றிலும் சேதமடைந்தது. 

இதையும் படிங்க;-  அதிமுகவில் முதல்வர் பதவிக்காக காத்திருக்கும் அந்த 25 பேர்... அழியபோகும் அம்மா கட்சி..? ஜெ. உதவியாளர் கதறல்..!

இந்த விபத்தை அடுத்து உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், இந்த விபத்தில் லாரி ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கேஸ் கசிவு இல்லை என்பதை உறுதி செய்தனர்.  

இதையும் படிங்க;- திமுக பொதுச்செயலாளராக யாரை போட்டாலும் பூகம்பம் வெடிக்கும்... பகீர் கிளப்பும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..!

இதனையடுத்து காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுனர் தூக்ககலக்கத்தில் லாரியை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. பின்னர், லாரியில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை வேறு வண்டிக்கு மாற்றி வண்டியை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அபகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!