டெல்லி மாநாட்டுக்கு சென்ற கணவரால் கொரோனா... பாதிக்கப்பட்ட மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது..!

By vinoth kumar  |  First Published Apr 13, 2020, 7:59 AM IST

வைரஸ் தொற்றில் ஏறக்குறைய 20 பெண்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர்தான் இஸ்லாமிய பெண்ணான அவர், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த கணவரிடம் இருந்து  நிறைமாத கர்ப்பிணிக்கு பரவியுள்ளது. இதனையடுத்து, அவர் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரசவ நாள் நெருங்கியபடியால் மேலும் அவரை தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வந்து வந்தனர். 


 ஈரோட்டில்  கொரோனா தொற்று  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருக்குமா என்பதை கண்டறிய 3 வாரங்கள் தேவைப்படும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில், அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலடத்தில் சென்னையும், 2வது இடத்தில் கோவை, 3வது இடத்தில் ஈரோடும் உள்ளது. ஈரோட்டில் 2 கர்ப்பிணி பெண்கள் உள்பட 64 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோட்டில் இந்த வைரஸ் தொற்று பெரும்பாலும் பரவுவதற்கு காரணம் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களும் தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்தவர்கள் தான். அப்படி அவர்களோடு தொடர்புடையவர்கள் தான் இந்த 64 பேரும்.  

Latest Videos

undefined

இந்நிலையில், இந்த வைரஸ் தொற்றில் ஏறக்குறைய 20 பெண்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர்தான் இஸ்லாமிய பெண்ணான அவர், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த கணவரிடம் இருந்து  நிறைமாத கர்ப்பிணிக்கு பரவியுள்ளது. இதனையடுத்து, அவர் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரசவ நாள் நெருங்கியபடியால் மேலும் அவரை தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வந்து வந்தனர். இந்நிலையில் நேற்றுஅந்தப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

தற்போது குழந்தை பிறந்த நிலையில், தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிறந்த குழந்தை தனது தாயோடு தான் உள்ளது. அதேபோல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். குழந்தைக்கு கொரோனா தொற்று இருக்குமா என்பதை கண்டறிய 3 வாரங்கள் தேவை என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

click me!