தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்களில் 42 பேர் ஈரோடு மற்றும் நெல்லை மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சீரான இடைவெளியில் குறைவதாயில்லை. நேற்று 48 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை டபுளானது. இன்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில், இதுவரை 1172 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டதில் 96 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று இரவு 50 ஆயிரம் துரித டெஸ்ட் கிட்கள் தமிழகத்திற்கு வர இருப்பதால், நாளை முதல் பரிசோதனை முடிவுகள் விரைவில் பெறப்படும். அதிகமானோரை பரிசோதனை செய்ய செய்ய பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக வாய்ப்புள்ளது.
undefined
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 163 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, திண்டுக்கல், ஈரோடு, நெல்லை ஆகிய மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் ஈரோட்டில் 26 பேருக்கும் நெல்லை மாவட்டத்தில் 16 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அந்த மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை முறையே, 58 மற்றும் 56 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை:
சென்னை - 163
கோவை - 60
ஈரோடு - 58
திருநெல்வேலி - 56
திண்டுக்கல் - 46
நாமக்கல் - 41
தேனி - 40
திருச்சி - 36
செங்கல்பட்டு - 28
ராணிப்பேட்டை - 27
திருப்பூர் - 26
மதுரை - 25
கரூர் - 23
தூத்துக்குடி - 22
விழுப்புரம் - 20
திருப்பத்தூர் - 16
சேலம், கன்னியாகுமரி - 14
கடலூர், திருவாரூர், திருவள்ளூர் - 13
நாகப்பட்டினம் - 12
தஞ்சாவூர், வேலூர், விருதுநகர் - 11
திருவண்ணாமலை - 9
காஞ்சிபுரம், சிவகங்கை - 6
நீலகிரி - 4
தென்காசி, கள்ளக்குறிச்சி - 3
ராமநாதபுரம் - 2
பெரம்பலூர், அரியலூர் - 1