அதிர்ச்சி.. 2 டோஸ் போட்டுக்கொண்ட டிஎஸ்பி உள்பட 7 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு.!

By vinoth kumarFirst Published Oct 7, 2021, 7:05 PM IST
Highlights

தமிழகத்தில் முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதில், பல்வேறு அரசியல் பிரபலகங்கள்,  முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் உள்பட பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது பாதிப்பு பெருமளவு குறைந்து வருகிறது. இதையடுத்து மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட டி.எஸ்.பி உள்பட 7 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதில், பல்வேறு அரசியல் பிரபலகங்கள்,  முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் உள்பட பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது பாதிப்பு பெருமளவு குறைந்து வருகிறது. இதையடுத்து மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  ஈரோடு மாவட்டத்தில் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட டி.எஸ்.பி உள்பட 7 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தியூர் போலீஸ் நிலையத்தில் 1 இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 15 ஏட்டுகள், 10 முதன்மை காவலர்கள், 2 போலீசார் என மொத்தம் 33 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டு கொண்டனர்.

இதையும் படிங்க;- உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி.. பொதுமக்களிடம் வசமாக சிக்கியது.. பிறகு நடந்த தரமான சம்பவம்..!

இந்நிலையில், அந்தியூர் போலீஸ் நிலையத்தில் வேன் ஓட்டுநராக பணிபுரியும் செல்வம் என்பவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதன்மை காவலர் ரமேஷ் சந்திரன், பெண் தலைமை காவலர் சகுந்தலா, முதல்நிலை பெண் காவலர் உதயகுமாரி, தனிப்பிரிவு தலைமை காவலர் மெய்யழகன், காவலர் சிவகுமார் உள்பட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பூட்டி கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

click me!