பொதுமக்களே உஷார்.. பானிபூரி சாப்பிட்ட பட்டதாரி இளம்பெண்.. சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து உயிரிழப்பு..!

By vinoth kumar  |  First Published Sep 26, 2021, 11:53 AM IST

ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம், இவரது மகள் ரோகிணி தேவி (34). பட்டதாரி இளம்பெண்ணான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் ரோகிணி தேவிக்கு அவரது அண்ணன்கள் பாலமுருகன், யுவராஜ் ஆகியோர் பானிபூரி வாங்கி கொண்டு வந்தனர். இதை சாப்பிட்ட ரோகிணி தேவி அரைமணி நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.

ஈரோட்டில் பானிபூரி சாப்பிட்ட பட்டதாரி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம், இவரது மகள் ரோகிணி தேவி (34). பட்டதாரி இளம்பெண்ணான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் ரோகிணி தேவிக்கு அவரது அண்ணன்கள் பாலமுருகன், யுவராஜ் ஆகியோர் பானிபூரி வாங்கி கொண்டு வந்தனர். இதை சாப்பிட்ட ரோகிணி தேவி அரைமணி நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

பின்னர் ரோகிணி தேவி எலக்ட்ரோல் பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு இரவில் படுக்க சென்றார். தொடர்ந்து நேற்று காலை 7.30 மணியளவில் வழக்கம் போல் எழுந்தார். அப்போது குளியல் அறைக்கு சென்று விட்டு திரும்பி வந்த ரோகிணி சோர்வாக காணப்பட்டார். அப்போது திடீரென ரோகிணி மயக்கமடைந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் முலம் அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ரோகிணி ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே ரோகிணி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ரோகிணியின் தந்தை கல்யாண சுந்தரம் வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதில் பானிபூரி சாப்பிட்டு சிறிது நேரத்தில் தனது மகள் வாந்தி எடுத்ததாகவும், அதை தொடர்ந்து அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பானிபூரி சாப்பிட்டு இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!