பயங்கரம்.. இடி தாக்கியதில் மஞ்சள் குடோனில் தீ விபத்து… 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 டன் மஞ்சள் தீக்கிரை.!

By manimegalai a  |  First Published Oct 3, 2021, 12:36 PM IST

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள 200 டன் விரலி மஞ்சள் தீயில் கருகி கரிக்கொட்டைகளாகின.


நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள 200 டன் விரலி மஞ்சள் தீயில் கருகி கரிக்கொட்டைகளாகின.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே இடி தாக்கியதில் மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோபி சுற்றுவட்டாரத்தில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. பெரியபுலியூரில் ராஜேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான மஞ்சள் குடோன் மீது நள்ளிரவில் இடி தாக்கியது. இதையடுத்து குடோனில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவல் அறிந்ததும் கோபி, பவானி, அந்தியூர், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குடோனில் கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

பத்து மணி நேரத்தைக் கடந்தும் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அடுத்தடுத்த அறைகளில் தீ பரவுவதால் தீயணைப்பு வீரர்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பத்ஹ்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 200 டன் விரலி மஞ்சள் தீக்கிரையாகியுள்ளது.

click me!