ஈரோடு மாவட்டத்தில் ஆண் நண்பருடன் பேசியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அடுத்த காவேரி சாலையைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 51). துணி தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 7 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றுக் கொண்டு வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சங்கரின் இளைய மகள் அண்மையில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தார். துணைத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி நேற்று மாலை படிப்பதாகக் கூறிக்கொண்டு தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென சங்கர் வீட்டிற்கு வந்த நிலையில், மாணவியின் ஆண் நண்பர் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதனை பார்த்து சங்கர் அதிர்ச்சி அடைந்த நிலையில், மாணவியிடம் விசாரித்துள்ளார்.
Crime News Today: குடிபோதையில் அடிக்கடி தகராறு; குடும்ப தலைவரை தீர்த்துக்கட்டிய மனைவி, மகன்கள்
மாணவியை கண்டித்துவிட்டு வெளியே சென்ற சங்கர் சுமார் 1 மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது மாணவி வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மாணவியை கீழே இறக்கிவிட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விரைந்து வந்த மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில் மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
“நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே” குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
தற்கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு கருங்கல்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.