வடமதுரை அருகே 40 குடும்பத்தினரின் பட்டா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சோலார் பேனல் அமைக்க வந்த ஊழியர்கள் மற்றும் மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார ஊழியர்களை விரட்டி அடித்த ஊர் பொதுமக்கள்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரை அருகே உள்ளது நாகன்களத்தூர். இப்பகுதிதியில் காலம் காலமாக 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சின்னத்தம்பி என்பவர் அவசர தேவைக்காக தன்னுடைய நிலத்தை ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் அடகு வைத்து 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கி அதற்கு வட்டி கட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
undefined
இந்நிலையில் மீண்டும் அந்த இடத்தை திருப்ப சென்றபோது அந்த இடத்தை வேறு நபருக்கு விற்பனை செய்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னத்தம்பி வேடசந்தூர் நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வழக்கு தொடர்ந்து தற்போது வரை வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையின் நிலத்தை வாங்கிய வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த தனியார் சோலார் நிறுவனமான ராபின்சன், சூரிய மின்சக்தி தயாரிக்கும் நிறுவனம் இப்பகுதியில் உள்ள 11 நபர்களின் பெயரில் உள்ள பட்டா குளத்தையும், 40 குடும்பத்தினர் வீட்டையும் விலைக்கி வாங்கி விட்டதாகவும், பொது குளத்தையும், அதில் உள்ள ஊராட்சியால் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி என அனைத்தையும் இடித்து விட்டு சோலார் அமைப்பதற்காக அடியாட்களுடன் தொடர்ந்து வந்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
பச்சிளம் குழந்தையையும் விட்டு வைக்காத சோகம்; சிவகாசியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை
இதனிடையே தனியார் சோலார் நிறுவனத்திற்கு ஆதரவாக வந்த மின்சார ஊழியர்கள் மின்சாரத்தை துண்டிக்க சென்றதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மின்சாரத்தை துண்டிக்க வந்த மின் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மின்சார ஊழியர் வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றனர்.
அதேபோல் குளத்திற்குள் ஆக்கிரமிப்பு செய்ய வந்த தனியார் சோலார் நிறுவனத்தின் ஊழியர்களிடம் குளத்தில் உள்ள பட்டா யார் எழுதிக் கொடுத்தது? எங்களது 11 பேர் பெயரில் உள்ளது. பட்டாவை முதலில் வழங்குங்கள். ஊராட்சி ரசீது உள்ளதா என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பியதால் பொதுமக்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து ஊழியர்கள் தப்பித்து ஓடினர். இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.