மலை கிராமங்களுக்கு குதிரைகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்

By Velmurugan s  |  First Published Apr 18, 2024, 6:55 PM IST

கொலைக்கானல் மலை கிராமங்களில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் குதிரைகள் மூலம் மலைப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.


மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கக்கூடிய நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மலை நகரமாக இருக்கக்கூடிய கொடைக்கானலில்  வாகனங்கள் செல்ல முடியாத பல்வேறு கிராமங்கள் இருந்து உள்ளன. 

“GPay மூலம் பாஜக பணப்பட்டுவாடா” அண்ணாமலை மீது திமுக பரபரப்பு குற்றச்சாட்டு

Tap to resize

Latest Videos

undefined

குறிப்பாக 400 வருடங்கள் பழமையாக உள்ள வெள்ளைகெவி, மஞ்சம்பட்டி, சின்னூர், பெரியூர் உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் இருந்து வருகிறது. இந்த மலை கிராமங்களுக்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் இன்று கொடைக்கானல் வழியாக வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. 400 ஆண்டுகள் பழமையாக உள்ள வெள்ளகெவி கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்கு இயந்திரங்கள் குதிரைகள் மூலம் கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. 

நாளை வாக்குப்பதிவு; ஒரே நாளில் இருவேறு பகுதிகளில் ரூ.4 கோடிக்கும் மேல் பறிமுதல் - புதுவையில் பரபரப்பு

குதிரைகளில் வாக்கு இயந்திரங்கள் மற்றும் நாளை தேர்தலுக்கு உபயோகப்படுத்தக் கூடிய பொருட்கள் அனைத்துமே குதிரைகள் மூலம் கட்டி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடனும் துப்பாக்கி ஏந்தி காட்டு வழியாக இந்த வாக்கு இயந்திரங்களை கொண்டு சென்று வருகிறார்கள் .மேலும் நாளை தேர்தல் முடிவடைந்த பிறகு வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு இயந்திரங்கள் வாக்கு என்னும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள் சவாலாக இருக்கக்கூடிய இந்த பணியில் பல்வேறு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

click me!