விருவீடு அருகே வலையப்பட்டி கிராமத்தில், வாலிபர் மீது வயர் திருட்டு வழக்கில். புகார் செய்ததால் மனம் உடைந்து, வாலிபர் தற்கொலை, காவல் நிலையம் முற்றுகை.
திண்டுக்கல் மாவட்டம், விருவீடு அருகே வளையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், பிள்ளான் மகன் பழனி குமார் (வயது 29). திருமணமாகாத நிலையில் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், வளையபட்டி கிராமத்தில், பல கிணறுகளில் மின் மோட்டார் வயர் திருடு போனது. இதுகுறித்து பழனிக்குமாரின் தோட்டத்தில் அருகில் உள்ள சிலர், பழனி குமார் தான் வயரை திருடியுள்ளார் என, விருவீடு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் பழனி குமாரை விசாரணைக்கு வருமாறு, தொலைபேசியில் அழைத்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த, பழனிக்குமார் தன்னை திருடனாக சித்தரித்து, புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்து, விஷம் அருந்தியுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் பழனிக்குமாரை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல், பழனிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்த, கிராம மக்கள் மற்றும் பழனி குமாரின் உறவினர்கள், விருவீடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினார்கள். வேண்டுமென்று பழனிக்குமார் மீது, பொய்யான குற்றச்சாட்டை வைத்து, புகார் அளித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
செல்போன் கோபுர உச்சியில் ஏறி காரியத்தை சாதித்த வாலிபர்; திருமணத்திற்கு சம்மதம் சொன்ன காதலி
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த, நிலக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர், முருகன் தலைமையிலான காவல் துறையினர், விசாரணை செய்து கிராம மக்களிடம், சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விருவீடு, வலையபட்டி கிராமங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.