நான் போலீஸ் இல்லை, பாஜககாரன்.. முகநூலில் பற்ற வைத்த காக்கி.. போலீசார் அதிர்ச்சி !

By Raghupati R  |  First Published Jun 1, 2022, 1:10 PM IST

கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி வரும் செய்திகளையும், திமுக அரசுக்கு எதிராக வரும் கருத்துகளையும் தனது ஃபேஸ்புக் முக நூல் பக்கத்தில் தனது நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறார். 


திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலையத்தில் தலைமை காவலராக திண்டுக்கல் மேட்டுபட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பணி செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி வரும் செய்திகளையும், திமுக அரசுக்கு எதிராக வரும் கருத்துகளையும் தனது ஃபேஸ்புக் முக நூல் பக்கத்தில் தனது நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறார். 

Tap to resize

Latest Videos

undefined

காவல்துறையினல் பணி செய்து கொண்டு பொது வலைதளங்களில் மத்திய அரசுக்கு ஆதரவாகவும், தமிழக அரசை விமர்சனம் செய்யும் வகையில் பிறர் சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் பதிவிடுவதை எடுத்து, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்ததால் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவிட்டு உள்ளார். இதனிடையே தலைமை காவலர் சுரேஷ் முகநூல் பக்கத்தில் நண்பர்களாக உள்ள சிவசேனா கட்சி மாநில அமைப்பாளர் சி கே பாலாஜி மற்றும் பிரபல ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இன்று புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் வந்தபோது செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க குவிந்தனர். இதை அறிந்த காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து அவர்களை விசாரணை செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டனர். இது தொடர்பாக சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் சி கே பாலாஜி கூறுகையில், காவலர் சுரேஷ் முகநூல் பக்கத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும் மத்திய அரசிற்கு ஆதரவாகவும் பேசியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் அதற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ விளக்கம் கேட்டு விசாரணைக்கு அழைத்தனர்.

ஆனால் தற்போது என்ன காரணத்திற்காகவோ எங்களுக்கு விசாரணைக்கு உட்படுத்தாமல் இதை பெரிதாக்க வேண்டாம். இது சம்பந்தமாக செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் எனக் கூறி அனுப்பி விட்டனர் பாரதப் பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பற்றி சமூக வலைதளங்களில் தேச பக்தியுடன் வெளியிடப்பட்ட கருத்துக்களை பதிவுகளை எடுத்து காவலர் சுரேஷ் ஷேர் மட்டும் செய்துள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது. 

மத்திய பாரதிய ஜனதா கட்சியை பற்றியும் பாரத பிரதமர் மோடி பற்றியும், அண்ணாமலை பற்றியும் அருவருக்கத்தக்க பல்வேறு கருத்துக்களையும் திமுகவினர் பரப்பி வருகின்றனர். அவ்வாறு சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக கட்சியை தடை செய்ய வேண்டியது வரும் விமர்சனம் என்பது வரத்தான் செய்யும். அதை எதிர்கொள்ள வேண்டுமே தவிர இதுபோன்று நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது’ என்று கூறினர். 

இதையும் படிங்க : BJP : அண்ணாமலை மீது திடீர் வழக்குப்பதிவு.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை - பாஜகவில் உச்சகட்ட பரபரப்பு !

இதையும் படிங்க : UGC: இந்த பல்கலை., பட்ட படிப்புகள் இனி செல்லாது..’யுஜிசி’ சொன்ன அதிர்ச்சி தகவல் ! மாணவர்கள் கதி ?

click me!