விபத்தில் நிறை மாத கர்ப்பிணி சுகந்தி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் சதீஷ்குமார் படுகாயங்களுடன் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் அருகே லாரி மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் போலீஸ் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரி- கார் மோதல்
undefined
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மனைவி சுகந்தி (27). இருவரும் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் தங்கள் காரில் திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியில் உள்ள சுகந்தியின் அம்மா வீட்டிற்கு காரில் வந்துள்ளனர். காரை சதீஷ்குமார் ஓட்டியுள்ளார்.
நிறைமாத கர்ப்பிணி பலி
திண்டுக்கல்-வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் ஏ.பி.நகர் அருகே கார் வந்துக்கொண்டிருந்த போது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் நிறை மாத கர்ப்பிணி சுகந்தி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் சதீஷ்குமார் படுகாயங்களுடன் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணவர் படுகாயம்
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் ஒரு நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிறைமாத கர்ப்பிணி மனைவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- ஓடிக்கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி.. பதபதக்கும் காட்சிகள்..!