திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொ.கீரனூரில் அதிகாலை 2 மணிமுதல் 3 வரையில் அடுத்தடுத்து 3 முறை கடுமையான சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், வீட்டின் ஓடுகள் உடைந்து கீழே விழுந்தன.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அடுத்தடுத்து 3 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொ.கீரனூரில் அதிகாலை 2 மணிமுதல் 3 வரையில் அடுத்தடுத்து 3 முறை கடுமையான சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், வீட்டின் ஓடுகள் உடைந்து கீழே விழுந்தன.
இதனால், பீதி அடைந்த பொதுமக்கள் அனைவரும் சாலையில் தஞ்சமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஓட்டன்சத்திரம் வட்டாட்சியர், காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்துள்ளனர். சுற்றுவட்டார பகுதிகளில் பாறைகளுக்கு வெடிவைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், சேதமடைந்த வீடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். புவியியல் தொடர்பான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் வந்து இது பற்றி நேரடியாக ஆய்வு செய்த பின்பே இந்த சத்தத்திற்கும் இந்த விரிசல் ஏற்பட்ட தற்கான காரணம் தெரியவரும் நிலை ஏற்பட்டுள்ளது