திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பாச்சலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சத்தியராஜ். இவரது மகள் பிரித்திகா (9). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி வளாகத்திலேயே உடல் எரிந்த நிலையில் உடலமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் பாச்சலூரில் பள்ளி அருகே சிறுமி உடல்கருகி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பாச்சலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சத்தியராஜ். இவரது மகள் பிரித்திகா (9). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி வளாகத்திலேயே உடல் எரிந்த நிலையில் உடலமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
undefined
இந்நிலையில், மாணவியை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என அவரது பெற்றோர் மற்றும் கொடைக்கானல் மலைக்கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஒரு வாரமாக விசாரணை நடத்தியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இருந்த போதிலும் சிறுமியின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை. எவ்வளவு சமாதனம் செய்தும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
இதனையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் தமிழக டி.ஜி.பி.க்கு பரிந்துரை செய்தார். அவரது கோரிக்கையை ஏற்று மாணவி மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு இன்று உத்தரவிட்டார். எனவே இதுவரை விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் தங்களது அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் வழங்குவார்கள். மேலும் வழக்கின் தீவிரமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.