எல்.இ.டி. டிவி., ப்ரிட்ஜ், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பரிசு கிடைக்கும்.. மிஸ் பன்னிடதீங்க மக்களே….!

By manimegalai a  |  First Published Oct 8, 2021, 9:59 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் மாதம் நூற்றுக்கும் அதிகமாக இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை தற்போது 20 ஆக குறைந்துள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் மாதம் நூற்றுக்கும் அதிகமாக இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை தற்போது 20 ஆக குறைந்துள்ளது.

 

Tap to resize

Latest Videos

undefined

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அதிகளவில் நடைபெறுவதால் தொற்று பரவல் குறைந்து வருகிறது. திண்டுக்கல்லில் கடந்த ஜூன் மாதத்தில் தினசரி தொற்று நூற்றுக்கும் மேல் பதிவாகிய நிலையில் தற்போது 20 ஆக குறைந்துள்ளது. திண்டுக்கல்லில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாகன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பு ஊசி போட வைத்ததன் காரணமாக தற்பொழுது கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2 தவணை தடுப்பூசி போட்டவர்கள் யாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவில்லை. 18 வயதிற்க்கு மேற்பட்டவர்களில் 17 லட்சத்து 30 ஆயிரத்து 600 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இவர்களில் மூன்று லட்சத்து 16 ஆயிரத்து 540 பேருக்கு இரண்டாவது தவனை போடப்பட்டுள்ளது. 96 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை 5-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. அதில் திண்டுக்கல் முழுவதும் ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் செயல்படும். தடுப்பூசி போட அனைவருக்கும் பிஸ்கட் வழங்கப்படும். மேலும் பொதுமக்களை ஊக்குவிக்க ஒவ்வொரு மணி நேரமும் குலுக்கல் முறையில் எல்.இ.டி. டிவி, குளிர்சாதன பெட்டி, ஸ்மார்ட் போன்கள், மிக்ஸி, அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

click me!