ஆந்திராவில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் திண்டுக்கல் அருகே உள்ள நல்லம்ம நாயக்கன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பாப்புலபாடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில், காரில் பயணம் செய்த தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் நல்லம்ம நாயக்கன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஹைவே பேட்ரோல் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சத்யா என்ற பெண்ணை மீட்டு தீவிர சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மரணமடைந்த நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுவாமிநாதன்(வயது 40), ராகேஷ்(12), ராதா பிரியா (14), கோபி (23) என்பது தெரிய வந்துள்ளது.
மகனின் காதல் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மாமனார் - இராமநாதபரத்தில் பரபரப்பு சம்பவம்
விபத்தில் படுகாயம் அடைந்த சத்யா, மரணம் அடைந்த சுவாமிநாதன் மனைவி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள கிருஷ்ணா மாவட்ட காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.