பழனி அருகே தனியார் தோட்டத்தில் புதைக்கப்பட்ட மனித உடல்? தடயங்களின் அடிப்படையில் போலீஸ் விசாரணை

By Velmurugan s  |  First Published May 24, 2024, 5:33 PM IST

பழனி அருகே தனியார் தோட்டத்தில் உடல் புதைக்கப்பட்டதற்கான தடயம் இருப்பதால் அப்பகுதியை தோண்டி ஆய்வு செய்வதற்கான பணிகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேல்கரைப்பட்டி கிராமத்தில் குமரவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இறந்த உடல் புதைக்கப்பட்டதற்கான தடயம் இருந்துள்ளது. அப்பகுதியில் ஆடு மேய்க்க வந்த நபர்கள் தனியார் நிலத்தில் மனித உடல் புதைக்கப்பட்டது போன்ற தடயங்கள் தென்பட்டதால் காவல் துறையினர் மற்றும் கிராமத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

கோவையில் பூங்காவில் விளையாடிய 2 குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலி; நிவாகிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த உயிர்பலி

Tap to resize

Latest Videos

undefined

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தன ஜெயன் தலைமையிலான காவல் துறையினர் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு பழனி வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர். மேல்கரைப்பட்டி கிராமத்தை சுற்றி உள்ள ஊர்களில் யாரும் இறந்தனரா? விவசாய நிலத்தில் உடலை புதைத்தது போன்ற தடயங்களை ஏற்படுத்தியது யார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறிய கருப்பண்ணசாமி; 7 வருடங்களுக்கு பின் நடைபெற்ற வினோத திருவிழா

பின்னர் மருத்துவர் வரவழைத்து உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி  ஆய்வு செய்வதற்கான பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தனியார் இடத்தில் மனிதஉடல் அல்லது ஏதும் புதைக்கப்பட்டதா என்பது தெரியாததால் மேல்கரைப்பட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் புதைக்கப்பட்ட இடத்தை தோண்ட நாளை காலை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தோண்டப்பட்டால் மருத்துவ குழுவினர் மற்றும் வட்டாட்சியர் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

click me!