இதற்காக தான் திமுக பிரமுகரை போட்டுத்தள்ளினோம்.. சிறுவன் உட்பட 6 பேர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

By vinoth kumar  |  First Published May 25, 2024, 8:11 AM IST

திண்டுக்கல் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியே வந்த சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். 


திண்டுக்கல் அருகே ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியின் கணவரை படுகொலை செய்த வழக்கில் சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து ஊராட்சி தலைவியாக இருந்து வந்தவர் நிர்மலா. இவரது கணவர் மாயாண்டி ஜோசப் (60). இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளது. மூத்த மகளுக்கு திருமணமான நிலையில் மற்ற 2 பிள்ளைகள் வெளியூரில் படித்து வருகின்றனர். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்  நிர்மலா  இறந்து விட்டார். திமுக பிரமுகரான ஜோசப் யாகப்பன்பட்டியில் பல ஆண்டுகளாக டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் உல்லாசம்! நேரில் பார்த்த மகள் துடிதுடிக்க கொலை! நாடகமாடிய தாய் சிக்கியது எப்படி? பகீர் தகவல்!

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாயாண்டி ஜோசப் தான் நடத்தி வரும் பாரிலிருந்து ப்ளாக்கில் விற்பனை செய்வதற்காக 3 பெட்டிகளில் மதுபாட்டில்கள் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மாயாண்டி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளனர். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த மாயாண்டி ஜோசப்பினை சுற்றி வளைத்த 6 பேர் கொண்ட கும்பல் அவரது தலை மற்றும் முகத்தை கொடூரமாக சிதைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாயாண்டி ஜோசப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். 

இதையும் படிங்க:  பார் ஆன பால்வாடி! சரக்குடன் ரீல்ஸ்! வாண்டடாக வந்து சிக்கிய திமுக பிரமுகரின் மகனை தட்டித்தூக்கிய போலீஸ்!

இதற்கிடையே திண்டுக்கல் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியே வந்த சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மாயாண்டி ஜோசப்பினை கொலை செய்தது உறவினர் ஆரோக்கியம் என்பவரது மகன் டேனியல் ராஜா(20), ஞானபிரகாசம் மகன் அலெக்ஸ் பிரிட்டோ(20),  பார்வையற்றோர் காலனி பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் தமிழ்செல்வன்(18),  செல்வராஜ் மகன் காளீஸ்வரன்(20), மணிகண்டன் மகன் பிரவீன் குமார்(19) மற்றும் 15 வயது சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்தனர். 

போலீசாரின் விசாரணையில் மாயாண்டி ஜோசப் குடும்பத்திற்கும் அவரது உறவினர் ஆரோக்கியம் என்பவரது குடும்பத்திற்கும் அதே பகுதியில் உள்ள நிலம் மற்றும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  

click me!