தருமபுரியில் அரசினர் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்த மாணவி விடுதியிலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர் ஒட்டப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி அதிகாலையில் அந்த மாணவி தோழிகளிடம் வயிறு வலிப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
பழனி கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற இஸ்லாமியர்களை ஆரத்தழுவி அழைத்துச் சென்ற இந்துகள்
இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகளும், விடுதி காப்பாளரும் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்களிடம் விடுதி நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மாசி பெருவிழா பிரமோற்சவம்; திருத்தணியில் அரோகரோ கோஷம் முழங்க கொடியேற்றத்துடன் தொடக்கம்
அவர்கள் நடத்திய விசாரணையில், மனோஜ்(வயது 21) என்பவருடன் மாணவி காதல் என்ற பெயரில் அவ்வபோது தனிமையில் இருந்து வந்ததும், விடுதியில் சேரும்போதே மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மனோஜ் மற்றும் மாணவியின் குடும்பத்தினருக்கு விடுதி நிர்வாகத்தினர், காவல் துறை மூலம் தகவல் தெரிவித்தனர். விடுதியில் தங்கி இருந்த மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் தருமபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.