கூலி தொழிலாளிகளுக்கு சிரட்டையில் வழங்கப்பட்ட தேநீர் - தருமபுரியில் தொடரும் இரட்டை குவளை முறை

By Velmurugan sFirst Published Feb 10, 2024, 8:19 PM IST
Highlights

தருமபுரியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சிரட்டையில் தேநீர் வழங்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள போளையம்பள்ளி கிராமத்தில் இருந்து ஐந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்கள், மாரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரின் விவசாய நிலத்தில் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது வேலை செய்த பெண்களுக்கு தோட்டத்தின் உரிமையாளர் தேங்காய் ஓட்டில் தேநீர் கொடுத்ததாகவும், தோட்டத்தின் உரிமையாளருக்கு மட்டும் சில்வர் டம்ளரில் தேனீர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

திமுக, பாஜக இருவருமே எங்கள் பகையாளிகள் தான் - ஜெயக்குமார் காட்டம்

இதைக் கண்ட ஒரு நபர் காலம் எவ்வளவோ முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சாதிய வன்மமா, அவர்களுக்கும் வேறு ஏதாவது டம்ளரில் கொடுத்திருந்தால் பரவாயில்லை. ஆனால் தேங்காய் ஓட்டில் தேநீர் கொடுத்து இருப்பது தவறு. இது கண்டிக்கத்தக்கது என அந்த தோட்டத்தின் பெண் உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார். 

ஓ.பன்னீர்செல்வத்தின் சகாப்தம் முடிந்து விட்டது; அவர் சொல்வதை கேட்க யாரும் தயாராக இல்லை - சி.வி.சண்முகம்

இது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற செயல்களில் உயர் சமூகத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், அவர்களுக்கு சாதி பாகுபாடில்லாமல் அனைவரும் ஒற்றுமை என்ற நோக்கத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

click me!