லாரி மீது பயங்கரமாக மோதிய கார்.. 3 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!

By vinoth kumar  |  First Published Oct 10, 2022, 3:57 PM IST

இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராகுல், சந்தோஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.


தருமபுரி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவன் உட்பட 3 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல் (22). இவர் லேப் டெக்னீசியன். இவரது நண்பர்களான ஜீவபாரதி (20), கார்த்தி (22), கவியரசு (21), சந்தோஷ் (15) உட்பட 5 பேர் நேற்று இரவு காரில் டீ குடிப்பதற்காக கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை கே.என். சவுளூர் பாலத்தில் சென்று கொண்டிருந்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- குட்நியூஸ்.. இனி சென்னை புறநகர் ரயில்களிலும் குளுகுளுனு பயணிக்கலாம்.. விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம்..!

அப்போது, முன்னால் இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராகுல், சந்தோஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 3 பேர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். 

இதுதொடர்பாக அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார்த்திக், கவியரசு ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க;-  சேலம் அருகே அதிர்ச்சி.. குப்பையில் கிடந்த பச்சிளம் குழந்தை.. அலறியடித்து ஓடிய மக்கள்..

click me!