பீரோவை இறக்கியபோது பயங்கரம்.. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் 3 பேர் உடல் கருகி துடிதுடித்து பலி..!

Published : Sep 22, 2022, 01:38 PM IST
பீரோவை இறக்கியபோது பயங்கரம்.. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் 3 பேர் உடல் கருகி துடிதுடித்து பலி..!

சுருக்கம்

தருமபுரி மாவட்டம் சந்தைபேட்டை ரோடு நகராட்சி பள்ளி எதிரே வசித்து வந்தவர் பச்சையப்பன் என்கிற குட்டி (50). இவரது வீட்டின் மேல் மாடியில் இலியாஸ் (70) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

தருமபுரி அருகே இரும்பு பீரோவை இறக்கியபோது மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் சந்தைபேட்டை ரோடு நகராட்சி பள்ளி எதிரே வசித்து வந்தவர் பச்சையப்பன் என்கிற குட்டி (50). இவரது வீட்டின் மேல் மாடியில் இலியாஸ் (70) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில், இலியாஸ் வேறு வீட்டிற்கு குடியேற முடிவு செய்தார். இதனால், டெம்போ வேனில் வீட்டின் உரிமையாளர் பச்சையப்பன், டிரைவர் கோபி (23), குமார் (23). இலியாஸ் ஆகியோர் டெம்போவில் ஏற்றி கொண்டிருந்தனர். மாடியில் இருந்து பால்கனி வழியாக பீரோவை கயிறு கட்டி இறக்கி கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பீரோ அந்த கம்பி மீது உரசியது. இதனால் தீப்பொறி கிளம்பியது. பீரோவை இறக்கி கொண்டிருந்த இலியாஸ் உள்பட 4 பேர் மீது மின்சாரம் தாக்கியது. இதில்,  தூக்கி வீசப்பட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், குமார் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பாம்பை கழுத்தில் போட்டு கொண்டு டாஸ்மாக் கடைக்கு வந்த இளைஞர்! அலறி ஓடிய குடிமகன்கள்!
தர்மபுரி மாவட்ட அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு: 135 காலிப்பணியிடங்கள்! முழு விவரங்களுக்கு…