ஐரோப்பாவில் ஏற்பட்ட நிலை தமிழகத்திற்கு வந்திடக் கூடாது.. 3 நாள் நடைப்பயணத்தை தொடங்கிய அன்புமணி

By vinoth kumarFirst Published Aug 19, 2022, 1:39 PM IST
Highlights

தருமபுரி- காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 3 நாள் நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். நடைப்பயணத்தில் அரசியல் நிலைகளை கடந்து அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தருமபுரி- காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 3 நாள் நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். நடைப்பயணத்தில் அரசியல் நிலைகளை கடந்து அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க அவர் வேண்டுகோள் விடுத்தார்.

காவிரியின் உபரிநீர்- தருமபுரியின் உயிர்நீர் என்ற முழக்கத்துடன் அன்புமணி ராமதாஸ் 3 நாட்கள் நடைபயணத்தை தொடங்கி உள்ளார். ஒகேனக்கல்லில் தொடங்கி பொம்மிடி வரை இந்த நடைபயணம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் கூறுகையில்;- தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இம்மாவட்டத்தில் விவசாயம் செழிக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். 

இதையும் படிங்க;- சந்தையில் மின்சாரம் வாங்க தமிழகத்திற்கு தடை..! மின் தடை ஏற்பட வாய்ப்பு..? அதிர்ச்சி அளிக்கும் ராமதாஸ்

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, கடந்த மே மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த போதும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனாலும், தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

நான் அமைதியாக உபநீர்த்திட்டம் செயல்படுத்த கோரி மக்கள் இயக்கமாக வருகிறேன். இதில் அரசியல் கிடையாது.  தர்மபுரி மக்களின் நலனுக்கான  திட்டம். நடைப்பயணத்தில் அரசியல் நிலைகளை கடந்து அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும். போராட்டம் என்று அறிவித்தால் தர்மபுரியில் ஒரு வாகனம் கூட செல்லாது, திட்டத்தை நிறைவேற்றி ஆக வேண்டும். அன்பாகவும்,அமைதியாகவும் கேட்கிறோம். 

தற்போது காலநிலை மாற்றம் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதனால் பெரிய வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். ஐரோப்பாவில் ஏற்பட்ட நிலை தமிழ்நாட்டுக்கும் வரும். வரலாறு காணாத வெள்ளம் கண்ட ஐரோப்பா, தற்போது குடிக்க கூட தண்ணீர் இல்லை. தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் 200 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது. தண்ணீரை சேமிக்க வைக்க அரசிடம் என்ன திட்டமும் இல்லை. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே நடைப்பயணம், இந்த திட்டத்தை செயல்படுத்தும் வரை பாமக ஓயாது. அரசு உடனடியாக திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க;-  எங்கும், எதிலும் ஊழல் என்ற கொள்கையில் திமுக உறுதியாக இருக்கும்... மு.க.ஸ்டாலினுக்கு பாஜக பதிலடி!!

click me!