பணியில் இருந்தபோது திடீரென காவலர் குடியிருப்பில் அறைக்கு சென்ற விபல்குமார் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த சக போலீசார் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டு சக போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
புதுச்சேரியில் காவலர் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி காவல்துறையில் 2011-ம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். புதுச்சேரி நெட்டபாக்கம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக விபல்குமார் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் வில்லியனூர் ஆகும். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்கள் விடுப்பு எடுத்திருந்த அவர் இன்று காலை மீண்டும் பணியில் சேர்ந்தார்.
undefined
இந்நிலையில், இன்று காலை பணியில் இருந்தபோது திடீரென காவலர் குடியிருப்பில் அறைக்கு சென்ற விபல்குமார் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த சக போலீசார் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டு சக போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, காவலர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பணியின் போது ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.