தாய் கண்முன்னே மகன் மீது ஏறிய ரயில்... கால் துண்டான நிலையில் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்..!

By vinoth kumar  |  First Published Nov 17, 2019, 5:21 PM IST

ஓடும் ரயிலில் இருந்து இறங்கியபோது தண்டவாளத்தில் விழுந்து, தாயின் கண் எதிரிலேயே மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஓடும் ரயிலில் இருந்து இறங்கியபோது தண்டவாளத்தில் விழுந்து, தாயின் கண் எதிரிலேயே மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் இளமையாக்கினார குளக்கரை சேர்ந்தவர் சரவணன் வயது (42) தனது தாயார் விஜயா திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுப்புரம் வரை செல்வதற்காக முன்பதிவு பெட்டியில் தவறுதலாக ஏறி விட்டார். அவரை திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் அவசர அவசரமாக பெட்டியிலிருந்து டிக்கெட் பரிசோதகர் கையை பிடித்து இழுத்து இது ரிசர்வேஷன் பெட்டி என்று இந்தியில் கூறி கீழே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் அவசரமாக இறக்கப்பட்ட சரவணன் மற்றும் அவரது தாய் விஜயா சாதாரண வகுப்பு பெட்டி கிளம்புவதற்கு முன்னே ரயில் கிளம்பி விட்ட காரணத்தால் உடனடியாக ஏற முடியாத சரவணன் படியில் ஏறி மீண்டும் ஏறங்க முற்பட்டபோது பெட்டியின் அடியில் மற்றும் தண்டவாளத்திற்கு இடையே சிக்கி இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

இதனையடுத்து, உடனே மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே இறந்து விட்டார். இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறும்போது சரவணன் சற்று மனவளர்ச்சி குன்றியவர் மற்றும் இவருடன் வந்த வயதான அம்மா விஜயாவூம் இதயநோயாளி,  வடநாட்டு டிக்கெட் பரிசோதகர் மனிதாபிமானம் இல்லாமல் கீழே இறக்கிவிட்டு அவசரத்தில் ஓடி ஏற முயன்ற  சரவணன் உயிரிழந்துவிட்டார். 

இதனால் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. ரயில்வே போலீசார் சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகரை கைது செய்ய வேண்டும். மேலும் ரயில்வே நிர்வாகம் உயிரிழந்த சரவணன் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்க வேண்டும் என்று உறவினர்கள், பொதுமக்கள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.

click me!