பண்ருட்டி அருகே காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அருகே காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுவாதி (22). இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கோட்டலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மதன் (22) இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவர்கள் சில ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர்.
ஆனால், இந்த காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்ததால் இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், காதலர்கள் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தனர். எனவே காதலர்கள் வாழ்வில் இணைய முடியாவிட்டாலும், சாவிலாவது இணைவோம் என்று முடிவெடுத்து தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தனர்.
இதனையடுத்து, நேற்று இரவு பணப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்த காதல் ஜோடிகள் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது இருவரும் கைகளை கோர்த்தப்படியே ரயில் முன் பாய்ந்தனர். இதில் அவர்கள் உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக ரயில் என்ஜீன் டிரைவர் உடனே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த கடலூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 2 பேரின் உடல்களை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் ஜோடிகள் ரயில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.