மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு ரயிலில் சென்று கொண்டிருந்தபோது பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் பாரதிராஜா செல்போன் தவறி கீழே விழுந்துள்ளது. ரயில் நிற்பதால் செல்போனை எடுத்து விடலாம் என்று ரயிலுக்கு அடியில் சென்றுள்ளார்.
சிதம்பரம் அருகே ரயிலுக்கு அடியில் விழுந்த செல்போனை எடுக்க சென்ற கல்லூரி மாணவர் மீது ரயில் ஏறி சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் நிலையத்தில் விழுந்த செல்போன்
கடலூர் மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே புலவனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரவாணன் மகன் பாரதிராஜா (21). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு ரயிலில் சென்று கொண்டிருந்தபோது பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் பாரதிராஜா செல்போன் தவறி கீழே விழுந்துள்ளது. ரயில் நிற்பதால் செல்போனை எடுத்து விடலாம் என்று ரயிலுக்கு அடியில் சென்றுள்ளார்.
இதையும் படிங்க;- பெண்கள் ஆசையை அடக்கி வைக்கக்கூடாது.. ஆசை இருந்தால் என்னிடம் சொல்.. காம பாடம் எடுத்த வக்கிர ஆசிரியர்.!
இரண்டு துண்டாகி உயிரிழந்த கல்லூரி மாணவன்
எதிர்பாராத விதமாக ரயில் புறப்பட்டது. இதில் ரயிலின் அடிப்பாகத்தில் சிக்கி, பாரதிராஜா உடல் இரு துண்டுகளாகி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் அவரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகங்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரயிலில் பயணம் செய்த போது செல்போன் விழுந்ததை எடுக்க சென்ற கல்லூரி மாணவன், ரயில் அடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.