கூட்டணி தர்மத்தை மீறி நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டித்த தொல்.திருமாவளவன் முதல்வரின் ஆணையை மீறி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களை ராஜினாமா செய்யவைத்து கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவராகத் தேர்வுபெற்ற ஜெயபிரபா தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையை ஏற்று பதவி விலகினார்.
கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. மொத்தமுள்ள 30 வார்டுகளில் திமுக - 11, விடுதலை சிறுத்தைகள்- 2, காங்கிரஸ்- 1, முஸ்லிம் லீக் - 1, மனித நேய மக்கள் கட்சி - 1, தமிழக வாழ்வுரிமை கட்சி - 1, மதிமுக - 1 உட்பட திமுக கூட்டணி 18 இடங்களை வெற்றி பெற்றது. சுயேச்சைகள் - 7, தேமுதிக - 1, அதிமுக - 3, பாமக - 1 இடங்களை பிடித்தன. இதில், மூன்று சுயேச்சைகள் திமுகவில் இணைந்ததால் கூட்டணி பலம் 21ஆக உயர்ந்தது.
undefined
இதனால், சேர்மன் பதவி திமுகவை சேர்ந்தவருக்கு கிடைக்கும் என கட்சியினர் நம்பிக்கையாக இருந்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியது. இதனால், திமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்து வந்த நிலையில் போட்டி வேட்பாளராக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் களமிறங்கி 23 ஓட்டுகள் பெற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர்மன்ற உறுப்பினர் கிரிஜா திருமாறன் 3 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். 3 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. பின்னர் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மதியம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதையும் படிங்க;- அடம்பிடிக்கும் திமுகவினர்...! கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்த விடுதலை சிறுத்தை..?ஆத்திரத்தில் ஸ்டாலின்...!
இதில் தி.மு.க. நகர செயலாளர் மணிவண்ணனின் மனைவியும், 3-வது வார்டு கவுன்சிலருமான ஜெயபிரபா என்பவர் போட்டியிட மனு தாக்கல் செய்தார். அப்போது அவருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சாார்பில் ஏற்கனவே தலைவர் பதவியில் தோல்வி கண்ட கிரிஜா திருமாறன் போட்டியிட்டார். இதில் 29 கவுன்சிலர்களும் பங்கேற்றனர். இதில், 22 ஓட்டுகளை ஜெயபிரபா மணிவண்ணன் பெற்றார். கிரிஜா திருமாறனுக்கு 6 ஓட்டுகள் கிடைத்தது. ஒரு ஓட்டு செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. ஜெயபிரபா நகரமன்ற துணைதலைவராக வெற்றி பெற்றார். இதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டதை அடுத்து, அவர் துணைதலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.
திருமாவளவன் அதிருப்தி
இந்நிலையில், கூட்டணி தர்மத்தை மீறி நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டித்த தொல்.திருமாவளவன் முதல்வரின் ஆணையை மீறி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களை ராஜினாமா செய்யவைத்து கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து, கட்சியை உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டுமென திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க;- இது மோடி அரசின் அப்பட்டமான தமிழர் விரோத நிலைபாடு.. சட்டத்துக்குப் புறம்பானது.. கொதிக்கும் திருமா.!
நகராட்சி துணைத் தலைவர் பதவி ராஜினாமா
அதன்படி கட்சித் தலைமையை சந்தித்த நகராட்சித் துணை தலைவர் ஜெயபிரபா மணிவண்ணன் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தனது டுவிட்டரில், நெல்லிக்குப்பம் நகர்மன்ற துணைத் தலைவராக தேர்வு பெற்ற ஜெயப்பிரியா அவர்கள் தமிழக முதல்வரின் ஆணையை ஏற்று பதவி விலகினார். அதனையொட்டி அவரும் தலைவராக தேர்வான ஜெயந்தி அவர்களும் அமைச்சர் கணேசன் அவர்களை சந்தித்தனர் அப்பொழுது நானும் உடன் இருந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.